நமது மு/புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் ஜூன் 5ஆம் திகதி உலக சுற்றாடல் தினம் (World Environment Day) மிகச் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு பாடசாலையில் விசேட நிகழ்வுகள் நடைபெற்றதுடன், சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக, எமது பாடசாலையின் 'சூழல் முன்னோடி' மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும், பரிசளிப்பு விழாவும் சிறப்பாக இடம்பெற்றன.
மேலும், மாணவர்களின் ஆர்வமான பங்குபற்றுதலுடன் பாடசாலை வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைத் துப்பரவு செய்யும் சிரமதானப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டன. தூய்மையான மற்றும் பசுமையான சூழலை உருவாக்குவதில் எமது கல்லூரி மாணவர்கள் காட்டும் அக்கறையும் ஈடுபாடும் மிகவும் பாராட்டுக்குரியது! 👏✨